கடந்த நிதியாண்டில் பாஜக ரூ. 6,074 கோடி நன்கொடை பெற்றிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
நிதியாண்டு 2024 - 25இல் அரசியல் கட்சிகளின் நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையின்படி, 2024 - 25 நிதியாண்டில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மக்கள் கட்சி (NPP) உள்ளிட்ட மற்ற 4 கட்சிகளின் மொத்த நன்கொடைகளைவிட, பாஜகவின் நன்கொடை சுமார் 10 மடங்கு அதிகமாகும். மேலும், 2023 - 24 நிதியாண்டில் பாஜகவின் ரூ. 2,243 கோடியைவிடவும் சுமார் 171 சதவிகிதம் அதிகம்.
2024 -25 நிதியாண்டில் தேசிய கட்சிகள், 11,343 நன்கொடைகள் மூலம் ரூ. 6,648.563 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளன.
இவற்றில் பாஜகவுக்கு 5,522 நன்கொடைகள் மூலம் மொத்தம் ரூ. 6,074.015 கோடியும், காங்கிரஸுக்கு 2,501 நன்கொடைகள் மூலம் ரூ. 517.394 கோடியும் பெற்றுள்ளன. 2023 -24 நிதியாண்டைவிட, 2024 25 நிதியாண்டில் 161 சதவிகிதம் அதிகரித்து, ரூ. 4,104.285 கோடி உயர்ந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
தேசிய கட்சிகளுக்கு தில்லியிலிருந்து மொத்தம் ரூ. 2,639.481 கோடியும், மகாராஷ்டிரத்திலிருந்து ரூ. 2,438.86 கோடியும், குஜராத்திலிருந்து ரூ. 309.177 கோடியும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
Summary
At ₹6,074 crore, BJP funding surges 171% in FY25
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிலையன்ஸ் பவர் 4வது காலாண்டு இழப்பு ரூ. 494 கோடி!

2025-26 நிதியாண்டில் பாரத் பெட்ரோலியம் லாபம் 75% வளா்ச்சி

வீல்ஸ் இந்தியா நிகர லாபம் ரூ.139 கோடி

ஏப்ரலில் தங்கம் இறக்குமதி 82% அபரித வளா்ச்சி!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



