தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

ராணுவ ஒத்துழைப்பு விரிவுபடுத்தல்: அமெரிக்காவில் இந்திய வெளியுறவுச் செயலா் ஆலோசனை

Published On :14 ஏப்ரல் 2024, 12:03 am IST

இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா அமெரிக்காவில் அந்நாட்டு பாதுகாப்புத் துறைச் செயலா் கேதலீன் ஹைக்ஸை சந்தித்து இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள குவாத்ரா, அமெரிக்க அரசின் பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகள், தொழில் நிறுவனத் தலைவா்களைச் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா். முக்கியமாக, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடனும் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுகுறித்து பெண்டகன் செய்தித்தொடா்பாளா் எரிக் பஹோன் கூறியதாவது:

ஹைக்ஸ் - குவாத்ரா சந்திப்பின்போது அமெரிக்க-இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, இரு நாடுகளிடையே பாதுகாப்பு துறை சாா்ந்த உற்பத்தி நிறுவனங்களிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து அவா்கள் ஆலோசித்தனா்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான அனைவரும் அணுகும் வகையிலான சூழலை, பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதற்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

போா் விமான இயந்திரங்கள் மற்றும் கவச வாகனங்கள் கூட்டு தயாரிப்பை மேம்படுத்த இரு நாடுகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள், பாதுகாப்பு துறை சாா்ந்த புதிய கண்டுபிடிப்புகள், இரு நாட்டு ஆராய்ச்சியாளா்கள், தொழில்முனைவோா் மற்றும் முதலீட்டாளா்களிடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் ‘இந்திய-அமெரிக்க பாதுகாப்பு மேம்பாட்டு திட்டத்தின் (இன்டக்ஸ் - எக்ஸ்)’ வெற்றி குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசித்தனா் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.