மக்களவைத் தேர்தல்: வரலாறு காணாத அளவில் பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலையொட்டி வரலாறு காணாத அளவில் ரூ.4,658 கோடிக்கு நகை, பணம், போதைப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி மார்ச் ஒன்று முதல் ஏப்ரல் 13 வரை ரூ1,142 கோடிக்கு பரிசுப் பொருட்கள் ரூ.2,068 கோடிக்கு போதைப் பொருள், ரூ.395 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் தமிழ்நாட்டில் ரூ.460 கோடி மதிப்பில் பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது செய்யப்பட்ட மொத்த பறிமுதலைவிட அதிகம் எனவும் அதேசமயம் மார்ச் 1முதல் தினமும் சராசரியாக ரூ 100 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலின்போது ரூ.3,475 பறிமுதலான நிலையில் தற்போது நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் முன்னரே இதுவரை இல்லாத அளவில் ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி கடந்த மாதம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

இதையடுத்து, அரசியல் கட்சியினர் வாக்காளர்களைக் கவர்வதற்காக, பணம், மதுபானம், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றைக் கொடுப்பதைத் தடுக்கும் நோக்கில், தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம், மதுபான பாட்டில்கள், போதைப்பொருள்கள், தங்கம் உள்ளிட்டவற்றைத் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com