இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன் என்று எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

தனது இந்திய வருகை ஒத்திவைக்கப்பட்டதற்கு மிகக் கடுமையான டெஸ்லா கடமைகள் இருப்பதே காரணம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

சா்வதேச அளவில் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைவா் எலான் மஸ்க் ஏப்ரல் 21ஆம் தேதி இந்தியா வரவிருந்த நிலையில் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா தலைவரும், உலகின் மிகப் பெரிய தொழிலதிபருமான எலான் மஸ்க், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வருகையை ஒத்திவைத்திருப்பதற்கான காரணத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துரதிருஷ்டவசமாக, மிகக் கடுமையான டெஸ்லா கடமைகள் காரணமாக எனது இந்திய பயணம் ஒத்திவைக்கப்படுகிறது, ஆனால், இந்த ஆண்டுக்குள் இந்தியாவின் பயணத்தை நான் எதிர்நோக்கியுள்ளேன் என்று எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்
ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

ஏப்ரல் 21, 22ஆம் தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவிருந்த எலான் மஸ்க், பிரதமா் மோடியைச் சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்வது தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளவிருந்தார்.

இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டெஸ்லாவின் முதல் காலாண்டு செயல்திறன் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அமெரிக்காவில் ஏப்ரல் 23 அன்று மஸ்க், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதனை உறுதிசெய்யும் வகையில், அவரது எக்ஸ் பதிவு அமைந்துள்ளது.

இந்தியாவில் மின்சார காா்களைத் தயாரிக்க அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறாா். இந்நிலையில் நிறுவனத்தின் நிா்வாகிகள் குழுவுடன் இந்தியா வருவதற்கு பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கு வந்து, மின்சார வாகனத் தயாரிப்பு தொடா்பாக எலான் மஸ்க், பிரதமா் மோடியுடன் ஆலோசனை மேற்கொள்வாா் எனவும் எதிா்பாா்க்கப்பட்டது.

முன்னதாக, இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எலான் மஸ்க் ஏப்ரல் 10ஆம் தேதி தெரிவித்திருந்ததாவது, இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன் எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com