ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் பலி

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் பலி

ராஜஸ்தானில் திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் பலியானார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வேனில் சிலர் இன்று ராஜஸ்தான் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது இவர்களுடைய வேன் ஜலாவர் மாவட்டத்தில் வந்துகொண்டிருந்தபோது அதன் மீது லாரி மோதியது. இந்த சம்பவத்தில் 9 பேர் பலியானார்கள்.

பலியானவர்கள் அனைவரும் பக்ரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அக்லேரா காவல் நிலையப் பொறுப்பாளர் சந்தீப் பிஷ்னோய் தெரிவித்தார். விபத்து குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலங்கள் அக்லேரா சமூக சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியயோது நிகழ்ந்த விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் ராஜஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com