”இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக காங்.”-பிரதமர் பேச்சு குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

காங்கிரஸ் ஆட்சியமைத்தால் முஸ்லிம்களுக்கு மக்கள் சொத்து பகிரப்படும்: பிரதமர் பேச்சுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

படம் | ஏஎன்ஐ

Updated On :

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு மறுபகிர்வு செய்வதாக உறுதியளித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தனது தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புப் பேச்சை பிரதமர் பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலன் பன்ஸ்வாராவில் நடந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், தாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தங்க நகைகளையும், குடும்பத்தினரின் சொத்து மதிப்புகளையும் பங்கிட்டு அதனை முஸ்லிம்களுக்கு மறுபகிர்வு செய்வார்கள் என்று பேசியிருந்தார்.

நாட்டின் வளங்களில் சிறுபான்மையினருக்குத்தான் முதல் உரிமை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது ஆட்சிக்காலத்தின்போது கூறியிருந்தார் என்பதையும் பிரதமர் மோடி மேற்கோள்காட்டிப் பேசினார்.

பிரதமரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இத்தகைய வெறுப்புப்பேச்சை கண்டிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க, எதிர்க்கட்சிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி கூறி வருகிறார்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஏதேனும் இந்து, முஸ்லிம் என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறதா என்று காட்டுங்கள். இல்லாவிட்டால் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது பொய் கூறவதை நிறுத்துங்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.