பான் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டால்.. கவலைப்பட வேண்டியது யார்?

பான் அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டால்? கவலைப்பட வேண்டியது யார்?
பான் கார்டு (கோப்புப்படம்)
பான் கார்டு (கோப்புப்படம்)

ஒருவருடைய பான் அட்டையை, யாரேனும் வீட்டு வாடகைப் படிக்குத் தவறாகப் பயன்படுத்த நேரிட்டால், அந்த பான் அட்டையின் சொந்தக்காரர்தான் அதுபற்றி கவலைப்பட நேரிடும்.

ஒருவேளை, தவறான பான் அட்டை பதிவு செய்தவரே, தனது பான் எண்ணை மாற்றம் செய்தாலொழிய, தவறாகப் பயன்படுத்தப்பட்ட பான் அட்டைக்குச் சொந்தக்காரர்தான் பாதிக்கப்படுவார்.

அதாவது, தனது பான் அட்டை வேறொருவரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவருக்கு ஏற்படுகிறது. இதனை மாற்ற வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

பான் கார்டு (கோப்புப்படம்)
போலியான வங்கி செயலி மற்றும் பங்குச் சந்தை செயலிகள்: எச்சரிக்கும் அரசு

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறைக்கு கிட்டத்தட்ட 10 ஆயிரம் புகார்கள், பான் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாகவே வந்து சேருகிறது. இதில், எத்தனை பேரின் பான் எண்கள் மீண்டும் சரிபார்த்து திருத்தப்பட்டது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

ஒருவேளை, யாரேனும், வாடகை ஒப்பந்தங்களில், தவறாக வேறொருவரின் பான் எண்ணை இணைக்க நேர்ந்தால், பாதிக்கப்பட்வருக்கு வருமான வரித்துறையிடமிருந்து தொடர்ந்து நோட்டீஸ் வருவரும், தொடர்ந்து வாடகை வருமானத்தைக் கணக்கில் சேர்க்குமாறு கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் தொடர்வதும் உண்டு.

ஆனால், பான் எண் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து வருமான வரித்துறை நன்கு அறிந்தே இருக்கிறது. வாடகை வருமானத்தை மறைப்பதற்காக இவ்வாறு பான் எண்ணை சிலர் மாற்றிக் கொடுப்பது ஏற்கனவே பல முறை வருமான வரித்துறையால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும் இதற்குக் காரணம்.

அதனால், உண்மையை விசாரிக்க முனையும் வருமான வரித்துறைக்கு பாதிக்கப்பட்டவர் போதிய ஒத்துழைப்பு அளித்து, உடனடியாக அதற்கு தீர்வு காண முன்வர, முயற்சிக்க வேண்டும் என்றுதான் ஆலோசனை வழங்கப்படுகிறது.

வாடகைப் படிக்கு, ஒருவரின் பான் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அவர் தனது வருமான வரிக் கணக்கில் எந்த வருவாயையும் காட்டவில்லை என்பதை வங்கியின் அறிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும். மேலும், அதுபோல தன்னிடம் எந்த வீடும் இலல்லை என்பதையும் தானே கையெழுத்திட்டு சமர்ப்பிக்க வேண்டியது இருக்கும் என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com