12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நிலச்சரிவு பகுதிகளை பார்வையிடும் ராகுல், பிரியங்கா!

வயநாடு நிலச்சரிவால் இதுவரை 275-க்கும் அதிகமானோர் பலி.

AICC

ராகுல், பிரியங்கா - AICC

Published On :

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் பார்வையிட்டு வருகின்றனர்.

தில்லியில் இருந்து கண்ணூர் விமான நிலையத்துக்கு இன்று காலை 10.30 மணியளவில் வருகை தந்த இருவரும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு கார் மூலம் சென்றடைந்தனர்.

முதல்கட்டமாக சூரல்மலை பகுதிகளில் மீட்புப் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளிடம் நிலைமையை கேட்டறிந்தனர்.

இவர்களுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலும் சென்றுள்ளார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி - AICC

வயநாட்டில் தொடா்மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 275-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, ராகுல், பிரியங்கா ஆகியோா் புதன்கிழமை அங்கு பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வயநாட்டில் தொடா்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக அவா்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. மாநில முதல்வர் பிரனாயி விஜயனும் மீட்புப் படையினர் தவிர வேறு யாரும் வயநாடு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டிருந்தார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி - AICC

இந்த நிலையில், இருவரும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு இன்று நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, நிலச்சரிவால் குடும்பங்களை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளனர்.

கடந்த மக்களவைத் தோ்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அங்கு இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் பிரியங்கா போட்டியிடுவாா் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.