ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் கேஜரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆத் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கேஜரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கடந்த மே 18-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள குமார், தனது கைது சட்டவிரோதமானது என்றும், முற்றிலும் மீறப்பட்ட செயலாகும் என்றும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
தில்லி காவல்துறை இந்த மனுவை எதிர்த்தது. குமார் அவசரமாக கைது செய்யப்படவில்லை என்றும் அவர் சட்டத்தின்படியே கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என்றும் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதையடுத்து, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்பு விசாரணை நடத்தப்பட்டதில், சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கோரி பிபவ் குமாரின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முன்னதாக, அவரது ஜாமீன் மனு விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளி கொலை வழக்கு: நண்பா் கைது
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
ராமதாஸின் மனு தள்ளுபடி! அன்புமணிக்கே 'மாம்பழம்' சின்னம்!
வாக் பக்ரி
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை




