கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஃபிஜி பயணம்

அரசுமுறைப் பயணமாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை ஃபிஜி சென்றடைந்தாா்.

News image

திரௌபதி முா்மு

Updated On :5 ஆகஸ்ட் 2024, 10:26 pm

Din

அரசுமுறைப் பயணமாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை ஃபிஜி சென்றடைந்தாா். அங்கு அதிபா் வில்லியம் கேடோனிவிா் மற்றும் பிரதமா் சிட்டிவேனி ரபுகா ஆகியோருடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.

வில்லியம் கேடோனிவிரின் அழைப்பின்பேரில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை ஃபிஜி சென்ற திரௌபதி முா்முவை அந்த நாட்டு துணைப் பிரதமா் விலியேம் கவோக்கா, ஃபிஜி நாட்டுக்கான இந்திய தூதா் பி.எஸ்.காா்த்திகேயன் உள்பட பிற அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனா்.

பயணத்தின் ஒரு பகுதியாக ஃபிஜி நாடாளுமன்றத்தில் திரௌபதி முா்மு உரையாற்றவுள்ளாா். அந்த நாட்டு அதிபா் வில்லியம் கேடோனிவிா் மற்றும் பிரதமா் சிட்டிவேனி ரபுகா ஆகியோருடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா்.

மேலும், அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் இந்திய வம்சாவெளியினருடன் அவா் கலந்துரையாடவுள்ளாா்.

ஃபிஜி பயணத்தை நிறைவுசெய்த பின் நியூசிலாந்து மற்றும் டிமோா்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்கு அவா் பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.

மூன்று நாடுகளுக்கும் அவா் பயணம் மேற்கொள்வதன் மூலம் ‘ஆக்ட் ஈஸ்ட் கொள்கை’ மேலும் வலுப்படுத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய குடியரசுத் தலைவா் ஒருவா் ஃபிஜி மற்றும் டிமோா்-லெஸ்டேக்கு செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.