
மக்களவையில் திரிணாமுல் எம்.பி.யின் கேள்வியை விமர்சித்து பதிலளித்தார் அமித் ஷா.
புது தில்லியில் இன்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சௌகதா ராய் ``இடதுசாரிகளின் தீவிரவாதத்தை மேற்கு வங்க அரசுதான் வெற்றிகரமாக சமாளித்து வருகிறது.
மேற்கு வங்கத்தின் இந்த நிர்வாக மாதிரியை ஆய்வு செய்து, மற்ற மாநிலங்களிலும் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்குமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, ``வடகிழக்கு மாநிலங்களில் 60 சதகிதத்துக்கும் அதிகமாக வன்முறை குறைந்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து வெற்றிகரமான நிர்வாக மாதிரிகளை செயல்படுத்துவதில் பிரதமர் மோடியிலான அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.
இருப்பினும், மேற்கு வங்க மாதிரியை செயல்படுத்த எந்த மாநிலமும் விரும்பாது என்று நான் கருதுகிறேன்" என்று பதிலளித்தார்.
பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் மத்திய அரசும் மேற்கு வங்க அரசும் முரண்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.