
சொத்துக் குவிப்பு வழக்கில் ஒடிஸாவின் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
ஒடிஸாவின் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளராகப் பணியாற்றிய பிரதீப் குமார் ராத் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளைக் குவித்துள்ளதாக, ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, பிரதீப்புக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். சோதனையில் கணக்கில் வராத இரண்டு அடுக்குமாடி கட்டடங்கள், புவனேஸ்வரில் இரண்டு குடியிருப்புகள், 45 வீட்டுமனைகள், சுமார் 1 கிலோ அளவுள்ள தங்கம், ரூ.1.62 கோடி வைப்புத்தொகை, இரண்டு கார்கள் மற்றும் பிரதீப்பின் பிற சொத்துக்களும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, பிரதீப் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
பிரதீப், 1991ஆம் ஆண்டில் உதவித்தொகை பொறியாளராக ரூ.2000 மாத சம்பளத்துடன் அரசு பணியில் சேர்ந்தார்; பின்னர், 2001ஆம் ஆண்டு வரையில் உதவி பொறியாளராக பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஓபிசிசி கூடுதல் தலைமை பொறியாளராக 2022ஆம் ஆண்டில் பதவியுயர்வு பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.