புது தில்லி: நீங்கள் இன்னமும் தோற்கவில்லை.. தோற்கடிக்கப்பட்டுள்ளீர்கள் என்று டோக்யோவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்தப் பிரிவில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து இந்தியர்கள் மீள்வதற்குள், வினேஷ் போகத், மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
29 வயதாகும் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் 100 கிராம் அதிக எடை இருந்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களையும், வினேஷ் போகத்துக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்துள்ள நிலையில், டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
வினேஷ், நீங்கள் எப்போதுமே தோற்கவில்லை, ஆனால், தோற்கடிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.
எங்களைப் பொறுத்தவரை, நீங்கள் எப்போதுமே ஒரு வெற்றியாளர்தான், நீங்கள் இந்தியாவின் மகள் மட்டுமல்ல, இந்தியாவின் பெருமையும் கூட என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதுபோல, ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக மல்யுத்தப் போட்டியில் முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என போற்றப்படும் சாக்ஷி மாலிக், கூறுகையில், இது நீங்கள் அடைந்த தோல்வியல்ல, இந்த நாட்டில் உள்ள எத்தனை பெண்களுக்காக நீங்கள் போராடினீர்களோ, அந்த ஒட்டுமொத்த மகள்களின் தோல்வி. இது ஒட்டுமொத்த நாட்டின் தோல்வி. இந்த நாடு உங்களுடன் இருக்கிறது, ஒரு வீராங்கனையாக உங்கள் போராட்டம் மற்றும் லட்சியத்துக்கு தலைவணங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
துரோனாச்சாரியால் விருது பெற்ற பயிற்சியாளர் மஹாவூர் போகத் கூறுகையில், தற்போது ஒரு மோசமான சூழ்நிலையில் அவர் முடிவெடுத்திருக்கிறார், மல்யுத்த வீரர்கள் கொடுக்கும் உத்வேகத்தால் அவர் 2028 லாஸ் ஏஞ்ஜெல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க வைப்போம் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரிஜ் பூஷண் மீது பாலியல் புகார் அளித்தது யார்? : வினேஷ் போகத் விடியோவில் விளக்கம்
ஒரு நாள் இரவில்...

உ.பி.யில் ரயில் தண்டவாளத்தில் மல்யுத்த வீரர் சடலம்!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை




