இந்திய ரூபாய் மதிப்பு சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (ஆக. 12) சரிந்தது.
2 காசுகள் சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு
2 காசுகள் சரிந்த இந்திய ரூபாய் மதிப்புபிடிஐ
Published on
Updated on
1 min read

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (ஆக. 12) சரிந்தது.

இறுதி வணிக நாளான வெள்ளிக்கிழமை (ஆக. 9) 2 காசுகள் அதிகரித்திருந்த நிலையில், இன்று 2 காசுகள் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் உள்ளிட்டவை இந்திய ரூபாய் மதிப்பு சற்று சரிந்ததற்கான காரணங்களாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வணிகத்தின் முதல் நாளான இன்று (ஆக. 12) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து, 83.97 ஆக உள்ளது.

கடைசி வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை, 2 காசுகள் உயர்ந்து 83.95 காசுகளாக இருந்தது. தற்போது சற்று சரிந்து 83.97 காசுகளாக உள்ளது.

2 காசுகள் சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு
ஹிண்டன்பர்க் சர்ச்சையால் சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!

சர்வதேச பங்குச் சந்தைகளின் நிலையற்ற தன்மை, புதிய அந்நிய முதலீடுகளின் வருகை, இந்திய பங்குச் சந்தையில் ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு உள்ளிட்டவற்றால் இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி இன்று சரிவுடனே முடிந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com