கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஒலிம்பிக் மல்யுத்தம்: வினேஷ் போகத் விவகாரம் -இன்று இரவு 9.30க்கு தீர்ப்பு

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் விவகாரம் தொடர்பாக இன்று இரவு 9.30க்கு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News image

வினேஷ் போகத்

Updated On :13 ஆகஸ்ட் 2024, 12:40 pm

DIN

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த இறுதி ஆட்டத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கில், இன்று இரவு 9,30 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோ எடைப்பிரிவில் விளையாட வேண்டிய நிலையில், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததாகக் கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் முறையிடப்பட்டது. இந்த மனு மீது வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெறுவதற்கு முன்பே தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதித்தீர்ப்பு வழங்கப்படுவதற்கான கால அவகாசத்தை செவ்வாய்க்கிழமை(ஆக. 13) வரை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் நீட்டித்திருந்தது.

இந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புக்கான விடை இன்று இரவு 9.30க்கு வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.