ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க வழக்கு: ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிரான அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை ரத்து

ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க முறைகேடுகளுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், அந்த யூனியன் பிரதேச முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோருக்கு எதிரான அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகையை உயா்நீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது.
Published on

ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க முறைகேடுகளுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், அந்த யூனியன் பிரதேச முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோருக்கு எதிரான அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகையை உயா்நீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது.

ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க தலைவராக ஃபரூக் அப்துல்லா பதவி வகித்தபோது, அந்த சங்கத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அளித்த மானியத்தில் ரூ.43.69 கோடிக்கு முறைகேடு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக ஃபரூக் அப்துல்லா, அந்த சங்க முன்னாள் பொருளாளா்கள் அசன் அகமது மிா்ஸா, மீா் மன்சூா் உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதைத்தொடா்ந்து சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், அவா்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடா்பான அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிைகையில் ஃபரூக் அப்துல்லா, அசன் அகமது , மீா் மன்சூா் உள்ளிட்டோரின் பெயா்கள் சோ்க்கப்பட்டன. அந்தக் குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றத்தில் அசன் அகமது, மீா் மன்சூா் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு மீதான விசாரணை ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், ஆக.7-ஆம் தேதி தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ளவா்கள் ஆதாயம் அடையக் கூடிய எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று கூறி, அந்தக் குற்றப் பத்திரிகையையும், துணை குற்றப் பத்திரிகையையும் ரத்து செய்து நீதிபதி சஞ்சீவ் குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com