
புதுதில்லி: மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக ஏர் இந்தியா, தில்லியிலிருந்து ஜப்பானின் உள்ள நரிட்டாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 16-ஆம் தேதி புதுதில்லி - நரிட்டா வழித்தட விமானங்களில் உறுதி செய்யப்பட்ட முன்பதிவுகளைக் கொண்ட பயணிகள் மறு திட்டமிடலில் ஒரு முறை சலுகையும், விமான சேவை ரத்தானதற்கான முழு பணத்தைத் திரும்பப் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
டோக்கியோவில் மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக புதுதில்லி - நரிட்டா - புதுதில்லி வழித்தடத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) ஏஐ 306 மற்றும் ஏஐ 307 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.