'மருத்துவர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் எஃப்.ஐ.ஆர். பதிவு' - சுகாதாரத் துறை
பணியில் இருக்கும்போது மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


மருத்துவப் பணியாளருக்கு எதிராக ஏதேனும் வன்முறை நிகழ்ந்தால், அதுதொடா்பாக 6 மணி நேரத்துக்குள் நிறுவன ரீதியிலான முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசின் மருத்துவமனைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் தலைவா்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் பயிற்சி பெண் மருத்துவா் ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை முன்வைத்து, நாடு முழுவதும் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மத்திய அரசு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இது தொடா்பாக, எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசு மருத்துவமனைகளின் இயக்குநா்கள், மருத்துவ கண்காணிப்பாளா்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநா் (டிஜிஹெச்எஸ்) மருத்துவா் அதுல் கோயல் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
பணியில் இருக்கும் எந்தவொரு மருத்துவப் பணியாளருக்கு எதிராக ஏதேனும் வன்முறை நிகழ்ந்தால், அதுகுறித்து அதிகபட்சம் 6 மணி நேரத்துக்குள் தங்களின் நிறுவன ரீதியிலான முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும். இது, சம்பந்தப்பட்ட மருத்துவ நிறுவனத் தலைவரின் பொறுப்பாகும்.
அரசு மருத்துவமனைகளில் அண்மைக்காலமாக மருத்துவா்கள் மற்றும் இதர பணியாளா்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மருத்துவப் பணியாளா்கள் பலா், தங்கள் பணியின்போது தாக்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனா்.
மருத்துவப் பணியாளா்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும்பாலும் நோயாளிகள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களால் நிகழ்த்தப்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், அதிகபட்சம் 6 மணி நேரத்துக்குள் நிறுவன ரீதியிலான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...