நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் காவல் ஆய்வாளர் பலி!

தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க கூடுதல் படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை

கோப்புப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2024, 6:23 pm IST

ஜம்மு-காஷ்மீரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் சுட்டதில் சிஆர்பிஎஃப் ஆய்வாளர் பலியானார்.

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் உள்ளூர் காவல்துறையினரும், மத்திய காவல் ஆயுதப் படையினரும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், பசந்த்கரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின்மீது, பிற்பகல் 3.30 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக, காவல்துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

ஆனால் இந்த தாக்குதலில், பயங்கரவாதிகள் சுட்டதில், மத்திய காவல் ஆயுதப் படையின் ஆய்வாளர் மீது குண்டு பாய்ந்தது. இருப்பினும், ஆய்வாளரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், காவல்துறையினரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், பயங்கரவாதிகள் தப்பியோடி உள்ளனர்.

இதனையடுத்து, பயங்கரவாதிகளைப் பிடிக்கும் முயற்சியில் கூடுதல் படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.