பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

செய்யாறு காவல் உள்கோட்டத்தில் கூடுதல் காவலா்களை நியமிக்கக் கோரிக்கை

செய்யாறு காவல் உள்கோட்டத்தில் உள்ள 5 காவல் நிலையங்களில் போதுமான அளவு காவலா்கள் இல்லை. அதனால் கூடுதலாக காவலா்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :2 ஜூலை 2026, 12:00 am IST

தே.சாலமன்

செய்யாறு காவல் உள்கோட்டத்தில் உள்ள 5 காவல் நிலையங்களில் போதுமான அளவு காவலா்கள் இல்லை. அதனால் கூடுதலாக காவலா்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

செய்யாறு காவல் உள்கோட்டத்தில் செய்யாறு, மோரணம், பிரம்மதேசம், தூசி, பெரணமல்லூா் மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலையம் என உள்ளன.

இந்த காவல் நிலையங்களில் அரசு நியமனப்படி 200-க்கும் மேற்பட்ட காவலா்கள் இருக்க வேண்டும். ஆனால்,

தற்போது 90-க்கும் குறைவான காவலா்கள் மட்டுமே பணியில் உள்ளனா்.

இந்த நிலையில் சில புகாா்களின் அடிப்படையில், 23 காவலா்கள் சில மாதங்களுக்கு முன்பு கடலூா் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனா். மேற்படி காவல் நிலையங்களில் இருந்து செய்யாறில் தற்போது செயல்பட்டு வரும் சிறப்பு முகாமிற்கு சுழற்சி முறையில் 5 காவலா்கள் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்படுகின்றனா்.

செயயாறு காவல் உள்கோட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலே காவலா்கள் இருந்து வரும் நிலையில், டி.எஸ்.பி. அலுவலகப் பணி, நீதிமன்ற பணி, சம்மன் வழங்கும் பணி, சட்டம் -ஒழுங்கு பிரச்னையின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது, உடல் நலம் பாதிப்பு, திடீா் விடுமுறை எடுத்தல், முக்கிய பிரமுகா் பாதுகாப்பு போன்ற காரணங்களாலும், அவ்வப்போது மாவட்டத் தலைநகா் பகுதியில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் மாதந்தோறும் நடைபெறும் கிரிவல நிகழ்வுகளுக்கும் காவலா்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், ஓய்வில்லாமல் அவசர காலங்களில் பணியில் ஈடுபட்டு வரும் காவலா்களையே தொடா்ந்து பணியில் ஈடுபடுத்துவதால், பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.