ரூ.13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!இன்று மீண்டும் போராட்டம்: சிஜேபி அறிவிப்புபிரதமா் வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ‘கிரீன் காா்டு’ விண்ணப்பங்கள் சரிவு!தில்லியில் இந்தியா கூட்டணி நாளை போராட்டம்: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு!ரஷியாவுடன் டீசல் கொள்முதலுக்கு அமெரிக்கா ஒப்பந்தம்!

நேபாளம்: பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41-ஆக உயர்வு!

நேபாளம்: சாலை விபத்தில் 41 இந்தியர்கள் பலி: ரூ. 2 லட்சம் நிவாரணம்...

படம் | பிடிஐ

Published On :

நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 41 யாத்ரீகா்கள் உயிரிழந்தனா்.

நேபாளத்தில் தனாஹுன் மாவட்டத்தில் மாா்ஷியாங்டி ஆற்றையொட்டிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா பேருந்துகள் 3 நேற்று(ஆக. 23) சென்று கொண்டிருந்தன. அப்போது, சாலையில் இருந்து திடீரென விலகிய ஒரு பேருந்து, 150 மீட்டா் பள்ளத்தில் கவிழ்ந்து, மாா்ஷியாங்டி ஆற்றில் விழுந்தது.

விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்தவர்களில் 41 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள 12 பேருக்கு காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பேருந்திலிருந்து மீட்கப்பட்டுள்ள உடல்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் மகாராஷ்டிரத்தின் நாஷிக் எடுத்துச் செல்லப்பட்டு, அதன்பின், அங்கிருந்து வாகனங்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Story image

இந்த நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையும், காயமடைந்துள்ளோருக்கு ரூ. 50,000மும் வழங்கப்படுமென பிரதமர் மோடி இன்று(ஆக. 24) தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.