40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாம்பழங்களில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதாக நேபாளம் குற்றச்சாட்டு

News image

மாம்பழங்கள் - IANS

Updated On :9 ஜூன் 2026, 10:22 pm IST

காத்மாண்டு : நேபாளத்தில் இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாம்பழங்களில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு விளைவிக்கப்பட்டிருப்பதாக இந்தியாவில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் மீது தர ரீதியான குற்றச்சாட்டு நேபாளத்தால் சுமத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய மாம்பழங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் எதிரொலியாக, இந்திய உள்ளூர் சந்தைகளில் மாம்பழ வரத்து அதிகரித்திருப்பதாக வணிகர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், நேபாள அரசின் இந்த நடவடிக்கையானது அந்நாட்டில் விவசாயிகளிடையே மாம்பழ உற்பத்தியை ஊக்குவிக்கும் யுக்தியாக பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனினும், நேபாளத்துக்கான மாம்பழ இறக்குமதியை இந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கும் என்பதால், அந்நாட்டில் மாம்பழச் சாறு தயாரிப்பு ஆலைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Summary

Nepal has restricted the import of mangoes from India due to the fruit allegedly containing excessive pesticides and a lack of quarantine facilities in the border areas, officials here said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.