மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசு

அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாகக் கூறி இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய நேபாளம் கட்டுப்பாடு...

No ban on import of Indian mangoes by Nepal: Govt

மாம்பழங்கள் - IANS

Published On :

புது தில்லி : இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை என்று மத்திய அரசு புதன்கிழமை(ஜூன் 10) தெளிவுபடுத்தியுள்ளது.

அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாகக் கூறி இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய நேபாளம் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், இந்திய மாம்பழங்களுக்கு நேபாளம் தடை விதித்திருப்பதாக ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகின. இந்நிலையில், இந்தத் தகவல்களை நிராகரித்து மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், இந்தத் தகவல் முற்றியும் தவறானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபாளத்தில் சில கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டு இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு அனுமதியளிக்கப்பட்டு இறக்குமதி தொடருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல், இதுவரை இந்தியாவிலிருந்து 149 தொகுதிகளில் மொத்தம் 2005 டன் மாம்பழங்கள் நேபாளத்துக்கு ஏற்றுமதியாகியுள்ளன. அந்த வகையில், ஜூனில் மட்டும், 18 தொகுதிகளின்கீழ், மொத்தம் 266 டன் மாம்பழங்கள் ஏற்றுமதியாகியுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபாள அரசின் மாம்பழ இறக்குமதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கையானது அந்நாட்டில் விவசாயிகளிடையே மாம்பழ உற்பத்தியை ஊக்குவிக்கும் யுக்தியாக பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனினும், நேபாளத்துக்கான மாம்பழ இறக்குமதியை இந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கும் என்பதால், அந்நாட்டில் மாம்பழச் சாறு தயாரிப்பு ஆலைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Summary

Nepal has not banned Indian mangoes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.