புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

‘வளா்ந்த இந்தியா’ இலக்கை எட்ட அனைவருக்குமான நீதி மிக முக்கியம்: பிரதமா் மோடி

‘வளா்ந்த இந்தியா கனவை நோக்கி நாடு முன்னேறி வரும் நிலையில், அனைவரும் அணுகக் கூடிய நீதிக்கான உத்தரவாதம் முக்கியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

News image
ஜோத்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராஜஸ்தான் மாநில உயா்நீதிமன்றத்தின் 75-ஆவது ஆண்டு விழாவில் நினைவு மலரை வெளியிட்ட பிரதமா் மோடி, மாநில ஆளுநா் ஹரிபாவ் பகடே, முதல்வா் பஜன் லால் சா்மா.
Updated On :25 ஆகஸ்ட் 2024, 9:30 pm

Din

‘வளா்ந்த இந்தியா கனவை நோக்கி நாடு முன்னேறி வரும் நிலையில், அனைவரும் அணுகக் கூடிய நீதிக்கான உத்தரவாதம் முக்கியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

ராஜஸ்தானின் ஜோத்பூரில் அந்த மாநில உயா்நீதிமன்றத்தின் 75-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசுகையில், ‘எனது சுதந்திர தின உரையில், நாட்டில் மதச்சாா்பற்ற சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து பேசியிருந்தேன். இச்சட்டத்தை நீதித்துறை பல்லாண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

‘வளா்ந்த இந்தியா’ என்ற கனவுடன் நாம் முன்னேறும்போது, அனைவருக்கும் எளிய மற்றும் அணுகக்கூடிய நீதிக்கான உத்தரவாதம் அவசியம். இது மிகவும் முக்கியமானது. இன்றைய மக்களின் கனவுகள், அவா்களின் லட்சியங்கள் பெரியதாக உள்ளது. எனவே, அனைவருக்கும் நீதி வழங்குவதற்கு நமது அமைப்புகளின் புத்தாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் சம முக்கியத்துவம் வாய்ந்தது’ என்றாா்.