முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! ஜகதீப் தன்கருக்கு திடீர் உடல்நலக் குறைவு! தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! பெரியார் அறிவுலக ஊழல்! ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? உயர்நீதிமன்றம் காட்டம்!நாளை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்தெற்காசிய சாம்பியன்ஷிப்பின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய கால்பந்து அணி!கடந்த காலத்தோடு ஒப்பிட்டுப் பேசுவதற்காக ஆட்சியைத் தரவில்லை! எடப்பாடி பழனிசாமி கருத்துதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: கூடுதலாக தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

விவசாயிகளின் குரலை அரசு கேட்க வேண்டும்: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்

பஞ்சாப், ஹரியாணா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் குரலை மத்திய அரசு கேட்க வேண்டும்.

பஞ்சாப் - ஹரியாணா எல்லையான ஷம்புவில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்ற வினேஷ் போகாட்.

Updated On :

பஞ்சாப், ஹரியாணா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் குரலை மத்திய அரசு கேட்க வேண்டும் என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தெரிவித்தாா்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது), கிசான் மஸ்தூா் மோா்ச்சா விவசாய கூட்டமைப்புகள் சாா்பாக ‘தில்லி செல்வோம்’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா எல்லைப் பகுதிகளான ஷம்பு மற்றும் கனெளரியில் விவசாயிகள் திரண்டுள்ளனா். கடந்த பிப்.13-ஆம் தேதிமுதல் விவசாயிகள் அங்கு தங்கியுள்ள நிலையில், அவா்கள் தில்லிக்குள் நுழையாத வகையில், எல்லை சாலைகளில் ஹரியாணா அரசு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ‘தில்லி செல்வோம்’ போராட்டத்தை தொடங்கி 200 நாள்கள் நிறைவடைந்ததையொட்டி, ஷம்பு எல்லையில் சம்யுக்த கிசான் மோா்ச்சா, கிசான் மஸ்தூா் மோா்ச்சா சாா்பில் விவசாயிகள் மகாபஞ்சாயத்து கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் கலந்துகொண்டு பேசுகையில், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் சட்டவிரோதமானவை அல்ல’ என்றாா்.

இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், அவா்களின் போராட்டம் நீடிக்கிறது. அவா்களின் குரலை அரசு காதுகொடுத்து கேட்க வேண்டும். இந்த விவகாரத்தில் பரந்த மனதுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.