மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,488 கன அடியாக குறைவு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்!மே.இந்திய தீவுகள் - இந்திய ஒருநாள் தொடா்: இன்று தொடக்கம்ஆதாரங்களை அழிக்க ஜெம் வீரமணியிடம் ரூ. 24 லட்சம் பெற்றாா் சாந்தி! காவல் துறை பதில் மனு! ரூ. 55,900 கோடி அந்நிய முதலீட்டை ஈா்த்து தமிழகம் முதலிடம்!ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு! அமெரிக்கா, சீனா உடன்பாடு! எஸ்ஐஆா் விவகாரம்: இண்டி கூட்டணி செப். 30-இல் கூடுகிறது?

உள்கட்டமைப்பு திட்டங்களின் தடைகளுக்கு தீர்வாக ‘பிரகதி இணையதளம்’!

நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகளைத் தீர்க்கும் தீர்வாக பிரகதி இணையதளம் உருவெடுத்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் வணிகப் பள்ளி கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

Published On :

நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகளைத் தீர்க்கும் தீர்வாக பிரகதி இணையதளம் உருவெடுத்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் வணிகப் பள்ளி கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

மத்திய அரசு அறிமுகம் செய்யும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் உரிய நேரத்தில் முறையாக செய்து முடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அறிமுகம் செய்த "பிரகதி (ஆக்கபூர்வ நிர்வாகம் மற்றும் விரைவான நடைமுறை)' என்ற வலைதளத்தின் செயல்பாடு குறித்த ஆய்வை "கேட்ஸ்' அறக்கட்டளை ஆதரவுடன் ஆக்ஸ்போர்ட் வணிகப் பள்ளி மேற்கொண்டது.

பெங்களூரு ஐஐஎம் (இந்திய மேலாண்மை நிறுவனம்) நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கள ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது:

மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகளுடன் மாதம் ஒரு முறை நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பங்கேற்பு பிரகதி தளத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, எண்ம (டிஜிட்டல்) கண்காணிப்புடன் இணைந்து, பொறுப்புணர்வு தொடர்பான புதிய கலாசாரத்தை பிரகதி வலைதளம் உருவாக்கியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள், புதிய விமான நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் விரைவான செயல்பாட்டுக்கு இந்த தளம் உதவியாக அமைந்துள்ளது. உதாரணமாக, நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் ஆகியவற்றில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க இந்த வலைதளம் உதவுகிறது; சமூக மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்தவும் உதவுகிறது.

மக்கள் குறைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் கால அளவை 32 நாள்களிலிருந்து 20 நாள்களாக குறைய இந்த வலைதளம் உதவுகிறது என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.