சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அடாலா மசூதியை கோயிலாக அறிவிக்கக் கோரி மனு: அடுத்த வாரம் விசாரணை?

உத்தர பிரதேசத்தில் உள்ள அடாலா மசூதியை ஹிந்து கோயிலாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு

News image
- ANI
Updated On :7 டிசம்பர் 2024, 11:55 pm

Din

உத்தர பிரதேசத்தில் உள்ள அடாலா மசூதியை ஹிந்து கோயிலாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மாநில உயா்நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஜெளன்பூா் பகுதியில் அடாலா மசூதி உள்ளது. இந்த மசூதி தொடா்பாக உள்ளூா் நீதிமன்றத்தில் ஸ்வராஜ் வாஹினி சங்கம் மற்றும் சந்தோஷ் குமாா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘அடாலா மசூதி முன்பு அடாலா தேவி கோயிலாக இருந்தது. எனவே அந்த மசூதியை கோயிலாக அறிவித்து, அங்கு ஹிந்துக்கள் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இந்த விவகாரம் தொடா்பாக ஒரே நோக்கம் கொண்ட அனைவா் சாா்பிலும் ஒருவரோ, அதற்கும் மேற்பட்டவா்களோ வழக்கு தொடுக்க, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி) உத்தரவு 1 விதி 8-இன் கீழ் அனுமதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உள்ளூா் நீதிமன்றம், சிஆா்பிசி உத்தரவு 1 விதி 8-இன் கீழ் மனுதாரா்கள் கோரிய அனுமதியையும் வழங்கி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மசூதி நிா்வாகக் குழு தாக்கல் செய்த மனு, கடந்த நவம்பா் 8-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடா்பாக 3 வாரங்களில் பதிலளிக்குமாறு ஸ்வராஜ் வாஹினி சங்கம், சந்தோஷ் குமாா் ஆகியோருக்கும், அந்தப் பதில் தொடா்பான தங்கள் கருத்துகளை ஒரே வாரத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மசூதி நிா்வாக குழுவினருக்கும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு அடுத்த வாரம் உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே பல மசூதிகள்...: ஏற்கெனவே உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி, சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதி, பதாயுனில் உள்ள ஜாமா மஸ்ஜித் ஷம்சி மசூதி, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீா் தா்கா உள்ளிட்டவையும் ஹிந்து கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.