
மத்திய இணையமைச்சர் சஞ்சய் சேத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை இணைமைச்சராக பதவிவகிப்பவர் சஞ்சய் சேத். இவரது மொபைல் எண்ணுக்கு அண்மையில் மிரட்டல் செய்தி ஒன்று வந்துள்ளது.
அதில், ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என கேட்டிப்பதோடு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டிருப்பதாக மத்திய இணையமைச்சர் சஞ்சய் சேத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக தில்லி மற்றும் ஜார்கண்ட் காவல் துறையினரிடம் வெள்ளிக்கிழமை அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து டிஜிபி உள்ளிட்ட தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள் சஞ்சய் சேத்தை சந்தித்து விவரம் கேட்டுள்ளனர்.
இதுபோன்ற விஷயங்களைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்று சஞ்சய் சேத் கூறியுள்ளார்.
இதனிடையே இதுகுறித்து மாநில அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று ராஞ்சி எம்எல்ஏ சிபி சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.