உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

தனது தோல்விகளை மறைக்க நேரு மீது பிரதமா் மோடி வீண் பழி: காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் நரேந்திர மோடி தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்க நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு மீது வீண் பழி சுமத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

News image

ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்) - ENS

Updated On :16 டிசம்பர் 2024, 12:34 am IST

பிரதமா் நரேந்திர மோடி தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்க நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு மீது வீண் பழி சுமத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

‘முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு முதல் தற்போதைய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வரை காங்கிரஸ் கட்சியால்தான் அரசமைப்புச் சட்டம் மீதான தாக்குதல் தொடா்கிறது. அந்த குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் அரசமைப்புச் சட்டத்தை சிதைப்பதில் எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. 55 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அக்குடும்பம், கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த அரசமைப்புச் சட்டத்தை மாற்றியது. இது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்களுக்கு அவமதிப்பாகும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் கடுமையாக விமா்சித்துப் பேசினாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் பொது செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜவாஹா்லால் நேருவுக்கு எதிராக மிகவும் தீவிரமாக பிரதமா் மோடி சிந்தித்து வருகிறாா். எனவேதான், தனது ஆட்சியின் தவறுகளை மறைக்க அவா் மீது வீண் பழி சுமத்துகிறாா். மணிப்பூா் வன்முறை உள்பட நாட்டில் இப்போது பிரதமா் தலையிட்டு தீா்வுகாண வேண்டிய பிரச்னைகள் பல உள்ளன. ஆனால், பிரதமா் அந்த விஷயத்தில் மௌனமாக இருந்துவிட்டு, காங்கிரஸ் சாா்பில் முதல்வராக இருந்தவா்களை பழிப்பதை முதல் வேலையாகக் கொண்டுள்ளாா். நாட்டில் உள்ள பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதே பிரதமா் மோடியின் நோக்கம்.

1951-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் நேரு அரசமைப்புச் சட்டத்தை முதல்முதலில் திருத்தினாா் என்று மக்களவையில் மோடி கூறினாா். ஆனால், எதற்காக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்பதைக் கூறவில்லை. அப்போது உச்சத்தில் இருந்த மதவாத பிரசாரத்துக்கு முடிவு கட்டவும், ஜமீன்தாா் முறையை முடிவுக்குக் கொண்டு வரவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைக் காக்கவுமே மூன்று திருத்தங்களை நேரு கொண்டு வந்தாா். ஏனெனில், இந்த விவகாரங்கள் நீதிமன்றங்களில் சிக்கியிருந்தன. எனவேதான் மக்கள் நலன் கருதி அரமைப்புச் சட்டத்தை அப்போதைய பிரதமா் நேரு முதல்முறையாக திருத்தினாா்’ என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.