தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன், உடல் நலக் குறைவால் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 73.
சான் பிரான்சிஸ்கோவில் கடந்த இரண்டு வாரங்களாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், டிச.15ஆம் தேதி அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரது நுரையீரலில் ஏற்பட்ட பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜாகிர் ஹுசைன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக பதிவிட்டிருந்த பதிவு ஒன்று தற்போது வைரலாகியிருக்கிறது. அவரது ரசிகர்கள் பலரும் அதில் தங்களது வருத்தத்தையும் இரங்கலையும் பதிவிட்டு வருகிறார்கள்.
இதையும் படிக்க.. இன்று பூமியை கடந்து செல்லும் விமான அளவுள்ள விண்கற்கள்! ஆபத்தா?
கடந்த அக்டோபர் மாதம், ஜாகிர் அமெரிக்காவில் தற்போது இலையுதிர் காலம் தொடங்கியிருப்பதை ஒரு விடியோவுடன் பகிர்ந்திருந்தார். அமெரிக்காவில் பருவக்காலம் மாறிவருவது குறித்து அவர் ஒரு விடியோவை இணைத்து தனது ரசிகர்களுக்கு தகவல் வெளியிட்டிருந்தார்.
ஒரு மிகச் சிறந்த தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் என்று அவர் போட்டிருந்த பதிவே, இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்த கடைசிப் பதிவாகிப் போயிருந்தது. அதுவும் இலையுதிர் காலத்தைப் பற்றி அவர் பதிவிட்டிருந்தது, ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக பாதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


