மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி போதை மறுவாழ்வு மையம் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்!

தில்லியில் இயங்கி வந்த போதை மறுவாழ்வு மையம் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்!

News image
மருத்துவமனை - பிரதி படம்
Updated On :20 டிசம்பர் 2024, 9:23 am

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் போதை மறுவாழ்வு மையம் என்ற பெயரில், அரசு அனுமதி எதுவும் இன்றி இயங்கி வந்த மையமே, போதைக்கு அடிமையாக்கும் மையமாக இயங்கி வந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

போதைக்கு அடிமையானவர்களின் ஒரே வாய்ப்பாக இருக்கும் போதை மறுவாழ்வு மையங்களில் நடக்கும் அநீதிகள், ஏதேனும் உயிரிழப்புகளின்போது வெளி உலகத்துக்கு வரும். ஒரு சில நாள்களில் காணாமல் போய்விடும்.

ஆனால், இந்த போதை மறுவாழ்வு மையத்தைப் பற்றிய தகவல்கள் அதையெல்லாம் விஞ்சிவிட்டது. இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற அளவில் தகவலைக் கேட்கும்போது அச்சம் ஏற்படுவதாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல், இப்பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்தி சிக்கியபோது, இந்த போதை மறுவாழ்வு(?) மையத்தில்தான் அவர்களுக்கு போதைப்பொருள்கள் கிடைத்ததாகக் கூறி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்.

இதில் முக்கிய அதிர்ச்சி என்வென்றால், அரசு அனுமதியோ, போதை மறுவாழ்வு மையத்தை நடத்த எந்த உரிமமோ இவர்கள் பெறவில்லை. அங்கிருப்பவர்களுக்கு போதைப் பொருளை வழங்கும் மையமாகவும் போதைப் பொருள் வாங்க வரும் இளைஞர்களுக்கு ஏராளமான போதைப் பொட்டலங்களைக் கொடுத்த இதர பகுதிகளில் விற்பனை செய்ய தூண்டியும் வந்துள்ளனர்.

போலியான மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவரும் அங்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு அதிக போதைப் பொருளைக் கொடுத்து அவர்களை போதையிலிருந்து வாழ்நாளில் மீண்டு வரவே முடியாத அளவுக்கு மாற்றிவிடுகிறார்கள் என்பதே.

இங்கு இதுவரை 200 நோயாளிகள் வந்துள்ளனர். இவர்கள் அனைவருமே இந்த போதை மறுவாழ்வு(?) மையத்தில் மூலம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாகவே மாறியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.