காப்பீட்டு நிறுவன தலைமை செயல் அலுவலர் கொலை: கைதான லூயிஜி மஞ்ஜானி மீது புதிய குற்றச்சாட்டுகள்

காப்பீட்டு நிறுவன தலைமை செயல் அலுவலர் கொலை வழக்கில் கைதான லூயிஜி மஞ்ஜானி பற்றிய தகவல்.
லூயிஜி மஞ்ஜானி
லூயிஜி மஞ்ஜானிPamela Smith
Published on
Updated on
2 min read

அமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேரின் தலைமை செயல் அலுவலர் பிரையன் தாம்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் லூயிஜி மஞ்ஜானி மீது கொலை, பின்தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகப்படும் நபராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை பென்சில்வேனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லூயிஜி மஞ்ஜானி, அரசு சார்பில் தொடரப்பட்டிருக்கும் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வகையில் தான் நியூயார்க் திரும்ப ஒப்புக்கொண்டார். சுமார் ஐந்து நாள்களாக தேடப்பட்டு வந்த நிலையில், பென்சில்வேனியாவில் கைது செய்யப்பட்டிருந்தார்.

லூயிஜி மஞ்ஜானி அங்கிருந்து நியூயார்க் அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு பிறகு காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் மீது கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா என நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லூயிஜி மஞ்ஜானியிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதன் ஆம் என்று அவர் பதிலளித்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கைவிலங்கு அவிழ்க்கப்பட்டு, காவலர்களுக்கு மத்தியில் அமரவைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர்களது கால்களில் விலங்கு மாட்டப்பட்டிருந்தது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட குற்றவாளியின் புகைப்படத்தை தாக்கல் செய்த காவல்துறை

கைது செய்யப்பட்ட லூயிஜி மஞ்ஜானியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், காப்பீட்டு நிறுவன நிர்வாகியை சுட்டுக்கொல்வதற்கு சில வினாடிகளுக்கு முன்பு அவரது பின் பக்கம் துப்பாக்கியை ஏந்தியிருந்த புகைப்படங்களையும் நியூ கார்க் நகரில் கொலை செய்வதற்கு முன்பு அவர் தங்கியிருந்த விடுதியில் அவர் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் தாக்கல் செய்தனர்.

மேலும், கொலை நடந்த இடத்துக்கு கொலையாளி முதுகில் பை ஒன்றுடன் சைக்கிளில் வரும் புகைப்படங்களையும், கொலையை நிகழ்த்திவிட்டு பையை கழற்றிவிட்டு, டேக்ஸியில் ஏரியதும் முகமூடியை கழற்றும் புகைப்படங்களையும் அதனுடன் இணைத்திருந்தனர்.

அந்த புகைப்படங்களுடன், கைது செய்யப்பட்ட பிறகு, லூயிஜி மஞ்ஜானியின் முழு உடல் புகைப்படம், ஆயுதத்தால் சுட்டுக் கொலை செய்த கொலையாளியின் உருவத்துடன் ஒத்துப்போவதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளது.

மன்ஹாட்டனுக்கு ஹெலிகாண்டரில் கொண்டுவரப்பட்ட லூயிஜி மஞ்ஜானி, பிறகு காவல்துறை வேன் மூலம் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். அவரைச் சுற்றி ஏராளமான எஃப்பிஐ-என்ஒபிடி அதிரடிப் படை வீரர்கள் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

என்ன தண்டனை கிடைக்கும்?

அரசு தரப்பு வழக்குரைஞர்கள் இது பற்றி கூறுகையில், மரண தண்டனை பெற்றுத்தர முடியுமா என்பது பற்றி தெரியவில்லை. ஆனால், லூயிஜி மஞ்ஜானி மீது தொடரப்பட்ட வழக்கில், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

நியூ யார்க் நகரில் அவர் தனது வழக்குரைஞர்களிடம் பேச அனுமதிக்கப்பட்டார். பிறகு நீதிமன்றத்தின் பக்கவாட்டு நுழைவாயில் வழியாக அவர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com