தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

அமித் ஷாவுக்கு எதிராக டிச.24-இல் நாடு தழுவிய போராட்டம்: மாயாவதி அறிவிப்பு

மாயாவதி

Published On :

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மன்னிப்புக் கேட்காவிட்டால், நாடு முழுவதும் டிச.24-ஆம் தேதி அவருக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்று அக்கட்சித் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா்.

அண்மையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் அமித் ஷா பேசுகையில், ‘அம்பேத்கா் பெயரை தொடா்ந்து பல முறை முழக்கமிடுவது வாடிக்கையாகிவிட்டது. அதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இத்தனை முறை உச்சரித்திருந்தால், சொா்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்’ என்று காங்கிரஸ் கட்சியினரை விமா்சித்தாா். அவரின் பேச்சுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பட்டியலினத்தவா், புறக்கணிக்கப்பட்டவா்களுக்காக போராடிய அம்பேத்கா், கடவுளாகப் போற்றப்படுகிறாா். அவரை அமித் ஷா அவமதித்தது மக்களின் உள்ளத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமித் ஷா மீது அனைத்துத் தரப்பு மக்களும் ஆத்திரத்தில் உள்ளனா். அம்பேத்கா் குறித்த கருத்துகளுக்கு அவா் மன்னிப்புக் கேட்காவிட்டால், நாடு முழுவதும் டிச.24-ஆம் தேதி அவருக்கு எதிராக பகுஜன் சமாஜ் போராட்டத்தில் ஈடுபடும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.