
எரிந்த நிலையில் 4 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு!
எரிந்த நிலையில் 4 வயது மகனின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிறுவனின் பெற்றோர்கள் அருகில் உள்ளோர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தை தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோப்புப் படம்
ராம்பூர்: எரிந்த நிலையில் நான்கு வயது மகனின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிறுவனின் பெற்றோர் அருகில் உள்ளோர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தை தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கங்காபூர் கதிம் கிராமத்தில், சனிக்கிழமை காலை சுமார் 9 மணி அளவில், சிறுவன் காணாமல் போனதாக சிறுவனின் குடும்பத்தினர் பகல் முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில், இரவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், சிறுவனின் உடல் பாதி எரிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீர் வடிகால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் அருகில் இருப்போர் மீது புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிறுவனின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார் உடல் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







