இருளில் மூழ்கிய அரசு: மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் பேரணி!
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தியவாறு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தியவாறு விவசாயிகள் பேரணியாகச் சென்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் மத்திய அரசு இருளில் மூழ்கியுள்ளதாகவும், இதனைக் கண்டிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலில் உண்ணாவிரதம் 29வது நாளாகத் தொடர்ந்துவரும் நிலையில், விவாசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
பஞ்சாப்-ஹரியாணா எல்லைப் பகுதியான ஷம்புவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் 101 போ் தில்லியை நோக்கி பேரணியாக சென்றபோது அவா்களை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா். இதில் விவசாயிகள் சிலர் காயமடைந்ததால், பேரணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கவில்லை என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...