ஜாமா மசூதியில் பலத்த பாதுகாப்புடன் தொழுகை நடத்திய முஸ்லிம்கள் (கோப்புப் படம்)
ஜாமா மசூதியில் பலத்த பாதுகாப்புடன் தொழுகை நடத்திய முஸ்லிம்கள் (கோப்புப் படம்)

சம்பல் மசூதி ஆய்வறிக்கை: நீதிமன்றத்தில் ஜனவரியில் தாக்கல்

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் ஆய்வறிக்கை ஜனவரி மாதம் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நீதிமன்ற ஆணையா் ரமேஷ் சிங் ராகவ் தெரிவித்தாா்.
Published on

 உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் ஆய்வறிக்கை ஜனவரி மாதம் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நீதிமன்ற ஆணையா் ரமேஷ் சிங் ராகவ் தெரிவித்தாா்.

கடந்த 16-ஆம் நூற்றாண்டில் சம்பல் பகுதியில் முகலாயா் ஆட்சி காலத்தில் ஷாஹி ஜாமா மசூதி கட்டப்பட்டது. ஹிந்துக் கோயிலை இடித்துவிட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அவா்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சம்பல் விசாரணை நீதிமன்றம், அந்த மசூதியில் நீதிமன்ற ஆணையரின் ஆய்வுக்கு உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து மசூதியில் 2-ஆம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னா், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து உள்ளூா்வாசிகள் வன்முறையில் ஈடுபட்டனா். இந்த வன்முறையில் 4 போ் உயிரிழந்தனா். காவல் துறையினா் உள்பட பலா் காயமடைந்தனா்.

இந்நிலையில், மசூதியில் ஆய்வு மேற்கொண்ட நீதிமன்ற ஆணையரான வழக்குரைஞா் ரமேஷ் சிங் ராகவ், சம்பலில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஷாஹி ஹாமா மசூதி ஆய்வறிக்கையை நிறைவு செய்யும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. அடுத்த மாதம் ஜன.2 அல்லது ஜன.3-ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com