ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

குகேஷை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடியை சந்தித்த செஸ் சாம்பியன் குகேஷ்...

பிரதமர் மோடியுடன் குகேஷ்.

Published On :

உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் தளத்தில், செஸ் சாம்பியன் குகேஷ் உடன் சிறந்த கலந்துரையாடல் நடத்தினேன். சில வருடங்களாக குகேஷுடன் நெருக்கமாக பழகி வருகிறேன். குகேஷின் உறுதியும், அர்ப்பணிப்பும்தான் என்னை மிகவும் கவர்ந்தது. அவரது நம்பிக்கை ஊக்கமளிக்கிறது.

இளம் வயதில் உலக சாம்பியன் ஆவேன் என்ற குகேஷின் விடியோ நினைவிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் குகேஷ் வெளியிட்ட விடியோ தற்போது அவரது முயற்சியால் உண்மையாகிவிட்டது. சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீனாவின் 32 வயதான டிங் லிரெனை வீழ்த்தி 18 வயதான குகேஷ் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்தார். சாம்பியன் பட்டம் வென்ற டி. குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் கடந்த டிச. 17ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.