மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பாஜக!: ராகுல் காந்தி

மத்திய புலனாய்வு அமைப்புகளை, எதிர் கட்சிகளை அழிக்கும் அமைப்பாக பாஜக பயன்படுத்துகிறது என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 'அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகியவையெல்லாம் இனி மத்திய புலனாய்வு அமைப்புகள் கிடையாது' என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவையனைத்தும் பாஜகவின் எதிர்கட்சிகளை அழிக்க பயன்படும் அமைப்பாக மாறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். 

'ஊழலில் திளைத்திருக்கும் பாஜக, தனது அதிகார மோகத்தால், இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.' எனக் குற்றம் சாட்டினார். 

மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் எதிர்கட்சிகள் மீது தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. 

நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கு சமூக மற்றும் பொருளாதார நீதியைப் பெற்றுத் தருவதற்காகவே இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் நடைப்பயணம் மேற்கு வங்கத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com