சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மற்றொரு படகை மீட்ட இந்திய கடற்படை!

கடந்த வாரத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட 3 படகுகளை மீட்ட இந்திய கடற்படை, அதில் சிறைவைக்கப்பட்டிருந்தவர்களையும் மீட்டனர். 
கோப்புப் படம்
கோப்புப் படம்


சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட ஈரானைச் சேர்ந்த மற்றொரு மீன்பிடி படகை இந்திய கடற்படையினர் மீட்டனர். இது தொடர்பான படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

கடந்த வாரத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட 3 படகுகளை மீட்ட இந்திய கடற்படை, அதில் சிறைவைக்கப்பட்டிருந்தவர்களையும் மீட்டனர். 

சோமலியாவின் கிழக்கு கடலில் ஈரான் நாட்டுக்குச் சொந்தமான எஃப்.வி. ஒமாரி என்ற மீன்பிடி படகு சென்றுள்ளது. அதனை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடிக்க முயற்சித்துள்ளனர். அப்படகில் ஈரான் நாட்டைச் சேர்ந்த 11 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்த 8 பேரும் இருந்துள்ளனர். 

அப்போது இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் ஷர்தா போர்க்கப்பல் அவ்வழியாக எல்லைப் பாதுகாப்பு மற்றும்கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. அதிலிருந்த கடற்படை அதிகாரிகள், 7 சோமாலிய கடற்கொள்ளையர்களுடன் அவர்களின் படகை கைப்பற்றினர். 
சோமாலியர்களால் சிறைபிடிக்க முயற்சிக்கப்பட்ட படகிலிருந்த ஈரான் மற்றும் பாகிஸ்தனைச் சேர்ந்தவர்களை இந்திய கடற்படையினர் காப்பாற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com