/

மோடியின் பொய்க்குவியல்கள்!: ராகுல்காந்தி

தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்றமாக இருந்தாலும் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் அனைத்தும் பொய்க்குவியல்களே என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

News image
நடைப்பயணத்தில் ராகுல்காந்தி | PTI
Updated On :8 பிப்ரவரி 2024, 9:51 am

DIN


தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்றமாக இருந்தாலும் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் அனைத்தும் பொய்க்குவியல்களாக உள்ளன எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். 

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம் மணிப்பூரில் துவங்கி, அஸ்ஸாம், மேகாலயா, மேற்குவங்கம், பிகார், ஜார்கண்ட், ஒடிசா கடந்து தற்போது சத்தீஷ்கரை அடைந்துள்ளது.

இந்நிலையில் மோடியை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தேர்தலாக இருந்தாலும் நாடாளுமன்றமாக இருந்தாலும் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் அனைத்தும் பொய்க்குவியல்களாகவே உள்ளன. அவரது பொய்குள்ளேயே அவர் மூழ்கிவிட்டார்.' எனக் கூறியுள்ளார். 

மேலும், 'பொதுமக்களைப் பற்றிய கேள்விகள் பிரதமர் மோடியைக் கோவப்படுத்துகின்றன. கோவம் எப்போது அழுவுக்கு மட்டுமே வழிவகுக்கும், வளர்ச்சிக்கு அல்ல' என அவர் பதிவிட்டுள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.