மோடி ஓபிசி இல்லை எனத் தெளிவுபடுத்திய பாஜகவிற்கு நன்றி!: ராகுல்காந்தி

மோடி ஓபிசி இல்லை என்பதை மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல் நிரூபிக்கிறது என ராகுல்காந்தி கூறியுள்ளார். 
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மோடி பிறப்பால் ஓபிசி இல்லை, அவர் ஒரு 'பேப்பர் ஓபிசி' என ராகுல்காந்தி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி வெளியிட்ட தகவல் எனது கருத்தை நியாயப்படுத்துவதாக உள்ளது என ராகுல் கூறியுள்ளார். 

மோடியின் ஓபிசி அடையாளம் அக்டோபர் 27, 1999-லேயே அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என மத்திய அமைச்சர் தெரிவித்ததைத் தொடர்ந்து, மோடி பிறந்து 50 ஆண்டுகள் வரை அவர் ஓபிசி கிடையாது என்பது தெளிவாகிறது என ராகுல் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியுள்ளார். 

'ஒரு நாளுக்கு மூன்று முறை உடை மாற்றிக்கொள்ளும், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான உடைகளை போட்டுக்கொள்ளும், 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேனாவில் எழுதும் மோடி சொல்லும் ஓபிசி-யின் அர்த்தம் ஒன்லி பிசினஸ் கிளாஸ் (Only Business Class) என்பதே என ராகுல் எக்ஸ் தளப்பதிவில் கூறியுள்ளார். 

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்கள் ஒருபோதும் நீதியைப் பெற்றுத்தர மாட்டார்கள் என அவர் கூறினார். மேலும் 'சாதிவாரிக் கணக்கெடுப்பைக் கண்டிப்பாக நாங்கள் நடத்துவோம்' எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com