விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிட்டி யூனியன் வங்கிக்கு 7 விருதுகள்!

இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மாநாட்டில் பல்வேறு பிரிவுகளில் 7 விருதுகளை சிட்டி யூனியன் வங்கி வென்றது.

News image
சிறந்த சேவைகள் அளித்ததற்காக பல்வேறு பிரிவுகளின் வழங்கப்பட்ட விருதுகளை ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி.ரபிசங்கரிடம் இருந்து பெற்றுக் கொண்ட சிட்டி யூனியன் வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.காமகோடி.
Updated On :14 பிப்ரவரி 2024, 6:09 am

DIN

இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மாநாட்டில் பல்வேறு பிரிவுகளில் 7 விருதுகளை சிட்டி யூனியன் வங்கி வென்றது.

மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த 19-ஆவது தொழில்நுட்ப மாநாடு கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த மாநாட்டில் சிறந்த தொழில்நுட்பங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்கும் வங்கிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் விருதுகள் வழங்கப்பட்டது.

இதில், சிறந்த செயற்கை நுண்ணறிவு, சிறந்த தொழில்நுட்ப பாதுகாப்பு மேலாண்மை, சிறந்த தொழில்நுட்ப வங்கி உள்பட 7 பிரிவுகளின் கீழ் சிட்டி யூனியன் வங்கி விருதுகளை வென்றது.

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி.ரபிசங்கரிடம் இருந்து சிட்டி யூனியன் வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி என். காமகோடி விருதுகளை பெற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.