சிறைகளை மேம்படுத்த ரூ.53 கோடி நிதி ஒதுக்கீடு

சிறைகளை மேம்படுத்த ரூ.53 கோடி நிதி ஒதுக்கீடு

மாநில சிறைகள் மேம்பாட்டிற்கு ரூ.53.1 கோடி நிதி ஒதுக்கீடு

மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் கட்டுமான பணி மேற்கொள்ள ரூ.53.1 கோடியை மகாராஷ்டிர மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

மாநில உள்துறை வெளியிட்ட குறிப்பில், தானே சிறையில் மாற்று பாலினத்தவருக்கான சிறப்பு சிறைகள் கட்ட ரூ.2.69 கோடி ஒதுக்கியுள்ளது.

அமராவதி, எரவாடி, சாவந்த்வாடி, கட்சிரோலி திறந்த சிறை, ரத்னகிரி சிறப்பு சிறை ஆகிய சிறைகளில் கட்டுமான பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எரவாடாவில் ரூ.13.49 கோடி கூடுதல் சிறைகள் கட்டவும் அமராவதியில் சிறை அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் கட்ட ரூ.10.82 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

22 மாற்று பாலினத்தவர்கள் சிறையில் உள்ளதாகவும் அவர்களில் 6 பேர் தானே சிறையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலம் முழுவதும் 26,377 சிறைவாசிகளுக்கான இடம் மட்டுமே உள்ள நிலையில் 40,485 பேர் சிறைகளில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com