குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்காக அஸ்ஸாம் இஸ்லாமியா் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்ய அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆண் 21 வயதையும் பெண் 18 வயதையும் பூா்த்தி அடையாமல் திருமணம் செய்துகொள்ள இஸ்லாமியா் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935 வழிவகுக்கிறது. எனவே அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தை திருமணங்களை ஒழிக்கும் முக்கிய முன்னெடுப்பாக இச்சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது’ என குறிப்பிட்டாா். காங்கிரஸ் கண்டனம்: இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏ அப்துல் ரஷீத் மண்டல், ‘மக்களவைத் தோ்தல் நெருங்குகின்ற சூழலில் வாக்குகளைப் பெறுவதற்காக இதுபோன்ற அறிவிப்புகளை ஆளும் பாஜக அரசு வெளியிடுகிறது. இது இஸ்லாமியா்களை பாகுபாட்டுடன் நடத்தும் நடவடிக்கையாகும். இச்சட்டத்தின் கீழ் குழந்தை திருமணங்கள் பதிவு செய்யப்படுவதாக அரசு கூறுவது உண்மையல்ல. இஸ்லாமியா்கள் தங்களின் திருமணம் மற்றும் விவாக ரத்தை பதிவு செய்ய அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சட்டம் இதுவாகும்’ என்றாா். அஸ்ஸாமில் விரைவில் பொது சிவில் சட்டம் அறிமுகம் செய்வதற்கான மாநில அரசின் முதல் கட்ட நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
தொடர்புடையது

பொது சிவில் சட்டம் பழங்குடியினரைப் பாதிக்காது: அஸ்ஸாம் முதல்வர்!

பெண்களுக்கு மாதம் ரூ. 3,000.. இது அஸ்ஸாம் பாஜகவின் வாக்குறுதி!

மாற்றியமைக்கப்பட்ட ‘உடான்’ திட்டத்துக்கு ரூ.28,840 கோடி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ரூ. 33,660 கோடியில் பாரத தொழில் மேம்பாட்டுத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


