மத்திய பிரதேசம் திண்டோரி மாவட்டத்தில் வேன் கவிழ்ந்ததில் 14 பேர் வியாழக்கிழமை காலை உயிரிழந்தனர்.
திண்டோரி மாவட்டம் ஷாப்புரா காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் திருமணத்துக்கு சென்றுவிட்டு 35-க்கும் மேற்பட்டோர் வேனில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைகீழாக சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் பலியாகினர்.
மேலும், காயமடைந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், நிதியுதவியாக தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிரே வந்த மினி வேன், பைக் மீது மோதிய அரசுப் பேருந்து! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!

நேபாளம்: பேருந்து கவிழ்ந்து 7 இந்தியர்கள் பலி

ஆந்திரத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 7 பேர் பலி

கோயில் மேற்கூரை இடிந்து 3 பெண்கள் பலி! 6 பேர் படுகாயம்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

