அமைச்சர் அறிக்கை வெளியீடு/ சிறுத்தை மாதிரி படம்
அமைச்சர் அறிக்கை வெளியீடு/ சிறுத்தை மாதிரி படம்IANS/ Pixabay

நாட்டில் சிறுத்தைகள் எண்ணிக்கை உயர்வு: அமைச்சர் தகவல்!

மாநிலங்கள் தோறும் சிறுத்தைகள் எண்ணிக்கை: விவரங்கள் வெளியீடு!

சூழலியல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறைகளின் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

சிறுத்தைகளின் பரவலில் மத்திய இந்தியாவில் நிலையான அல்லது குறைந்த வளர்ச்சி போக்கு காணப்படுவதாகவும் சிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளி பகுதிகளில் அவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் ‘சிறுத்தைகளின் நிலை’ என்று பெயரிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் 1.08 சதவிகிதம் வளர்ச்சி விகிதம் ஏற்பட்டுள்ளது.

மத்திய மற்றும் கிழக்கு மலைத்தொடர்களில் 1.5 சதவிகிதம் வளர்ச்சியும் கங்கை சமவெளி மற்றும் சிவாலிக் மலைகளில் 3.4 சதவிகிதமாக வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

மத்தியப் பிரதேசம் (3907) நாட்டிலேயே அதிக சிறுத்தைகள் கொண்டுள்ள மாநிலமாகவும் அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (1985), கர்நாடகா (1879) மற்றும் தமிழ்நாடு (1070) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

32,803 இடங்களில் பொருத்தப்பட்ட கேமராக்களின் பதிவுகள், 6 லட்சம் கிமீ தொலைவில் பாத தடய ஆய்வுகள் செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

‘ப்ராஜெக்ட் புலிகள்’ திட்டத்தின் வீச்சு சிறுத்தைகள் எண்ணிக்கையிலும் பிரதிபலிப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com