ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும்: மாயாவதி

மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளித்து உண்மையான தேசபக்தியைக் காட்ட வேண்டும் என பாஜக அரசைக் கண்டித்து மாயாவதி விமர்சித்துள்ளார். 

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:57 am

மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளித்து உண்மையான தேசபக்தியைக் காட்ட வேண்டும் என பாஜக அரசைக் கண்டித்து மாயாவதி விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக மாயாவதி எக்ஸில் வெளியிட்ட பதிவில், 

மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டில் அரசாங்கம் உண்மையான தேசபக்தியையும், வேலைவாய்ப்பு உத்தரவாதத்தையும் நிறைவேற்ற வேண்டும். 

முன்பு காங்கிரஸ் இப்போது பாஜக தலைமையிலான சாதிவெறியால் கோடிக்கணக்கான ஏழைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளித்து உண்மையான தேசபக்தியைக் காட்ட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

மக்களுக்குச் செலவுக்கு பணம் இல்லை என்றால் வளர்ச்சி குறித்துப் பேசி என்ன பயன்? வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும்போது வளர்ந்த இந்திய எப்படிச் சாத்தியமாகும் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.