காதலனை சந்திக்கச் சென்ற மகள்: ஆத்திரத்தில் தந்தை வெறிச்செயல்
ஆத்திரத்தில், மகளையும் காதலனையும் தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பரேலி: உத்தரப் பிரதேச மாநிலம் பதௌன் மாவட்டத்தில், வீட்டை விட்டு வெளியேறி காதலனை சந்தித்ததால், ஆத்திரத்தில், மகளையும் காதலனையும் தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்த ஆயுதத்தோடு, காவல்நிலையத்தில் சரணடைந்த தந்தை மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பரோலி பகுதியில், 19 வயதான மகளும், 20 வயதான அவரது காதலனும், பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்களால் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தந்தை மீது கொலை வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், இரண்டு உடல்களையும் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த வாக்குமூலத்தில், தனது மகள், காதலனுடன் வீட்டை விட்டு ஓட முடிவு செய்திருப்பதாக சந்தேகம் அடைந்தேன். அதனால் அவளை தொடர்ந்து கண்காணித்து வந்தோம்.
செவ்வாய்க்கிழமை காலை 4 மணிக்கு அவர் வீட்டிலிருந்து வெளியே சென்று காதலனை சந்தித்தாள். அவளைப் பின்தொடர்ந்து சென்ற தந்தை, கையில் வைத்திருந்த மண்வெட்டியால் இருவரையும் தாக்கிக் கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...