கரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும்?

நாட்டில் ஜனவரி 4ஆம் தேதி நிலவரப்படி, கரோனா பாதித்திருப்பவர்களின் எண்ணிக்கை 4,423 ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


நாட்டில் ஜனவரி 4ஆம் தேதி நிலவரப்படி, கரோனா பாதித்திருப்பவர்களின் எண்ணிக்கை 4,423 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கரோனா பாதித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. 

இது குறித்து சுகாதாரத் துறை கூறுவது என்னவென்றால், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் 5 நாள்களுக்கு தங்களை தனிப்படுத்திக் கொள்ளவேண்டும். வீட்டில் இருக்கும் முதியவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஜெஎன் 1 வகை கரோனா திரிபு பரவத் தொடங்கியதிலிருந்து, கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. எனவே, வயதானவர்கள் மற்றும் இணை நோய் இருப்பவர்கள் கூட்டமான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாள்கள் பண்டிகைக் காலமாக இருப்பதால், அடுத்த 15 நாள்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்துகிறது.

ஒவ்வொரு மாவட்ட நிர்வாகங்களும், கரோனா பாதிப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையை கண்காணிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்தவர்களில் 5 பேர் பலியானதாகவும் புள்ளிவிவர தெரிவிக்கிறது.

இதுவரை பரவிய கரோனா தொற்றுகளில் பிஏ.5 வகை திரிபு உயிர்க்கொல்லியாக இருப்பதாகவும், கரோனா பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்களில் மற்ற நோயாளிகளைக் காட்டிலும் ஒமைக்ரான் வகை பிஏ.5 வகை திரிபு பாதித்தவர்களின் இறப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com