பள்ளி நிகழ்ச்சியில் 35 மாணவர்கள் திடீர் மயக்கம்!

அஸ்ஸாமில் பள்ளி நிகழ்ச்சியின்போது 35 மாணவர்கள் திடீரென மயங்கியதால், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். 
மாவட்ட ஆணையர் மிருதுல் யாதவ்
மாவட்ட ஆணையர் மிருதுல் யாதவ்

அஸ்ஸாமில் ராமகிருஷ்ணா வித்யாபத் பள்ளியில் நடந்த குனோட்சாவ் நிகழ்ச்சியில் 35 மாணவர்கள் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயங்கி விழுந்த மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாணவர்கள் மயங்கியதற்கு, அவர்கள் யாரும் காலை உணவு எடுத்துக்கொள்ளாதாதது காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய மாவட்ட ஆணையர் மிருதுல் யாதவ், 'மாணவர்கள் திடீரென மயங்கி விழுகவும் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

மருத்துவக்குழுவை ஏற்கனவே அனுப்பியுள்ளோம். சாப்பிடாததினால் ஏற்பட்ட மயக்கம் இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குனோட்சாவ் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது' எனக்கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com